Wednesday, September 2, 2009

நட்புப் பாதை



நட்பென்னும் பாதையில் சிலமுறை உண்டு இடைவெளிகள்,
தேவையான கண நொடியில் இடைவெளிகள் சிட்டாய் பறக்காதோ?
அன்றுவரை தனித்து பயணிக்க துணிதாலும்;
அன்றைய பயணத்தை ஒன்றாக்க துடிக்காதோ மனம்??


பிரிவென்னும் தடைகள் - சுகங்களை பகிர்ந்துகொள்ளத் தடையாகலாம்,
சுமைகளை பகிர்ந்துகொள்ளத் தடையாக முடியுமோ??
அன்பது அடைபட்டுக் கிடந்தாலும்;
அது இல்லை என்று ஆக இயலுமா?


பாதையில் வந்த பேரலைகள், பாதையை இரண்டாக்க முடியும்;
பாதை கடந்து பிணைத்திருக்கும் மனதை பிளக்க முடியுமா??
ஓருயிராய் இருக்கத் தவித்த மனம்,
ஒருகணம் தினம் எண்ணித் துடிக்காதோ?


தூரங்கள் பல கல் தொலைவு இருந்தாலும்,
கல் பாரங்களை கடந்து நட்பு என்றும் பிரகாசிக்கும்.