Monday, June 29, 2009

இமை கண்ணை காதலித்தால்...

உன்னை காணத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை விலக்கத் துடிக்கிறாய்;
என்னுள் வைத்து, காக்கத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை எடுத்து எரிகின்றாய்;
ஒளி தர துடிக்கிறேன், உன் வாழ்வில்!
ஒளி சென்ற பொழுதே,
என்னைக் காண சம்மதித்தாய்;
வாழும் போது சேர மறுத்தாய்,
இறந்த பின்னோ,
என்னை தழுவி அணைத்தாய்!
இருந்துமே உன்னைக்
காதலிக்கிறேனடி என் கண்ணே!