Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, May 9, 2010

உணர்வு

ஊடுருவும் ஊடுருவும் உணர்வு!
உணர்சிகளுக்கே உணர்வளிக்கும் உணர்வு!
ஊடல்களை உதறி எரியச் செய்யும் உணர்வு,
உலகுக்கே உயிரளிக்கும் உணர்வு;
காதலன்றோ?

Monday, June 29, 2009

இமை கண்ணை காதலித்தால்...

உன்னை காணத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை விலக்கத் துடிக்கிறாய்;
என்னுள் வைத்து, காக்கத் துடிக்கிறேன்;
நீயோ!
என்னை எடுத்து எரிகின்றாய்;
ஒளி தர துடிக்கிறேன், உன் வாழ்வில்!
ஒளி சென்ற பொழுதே,
என்னைக் காண சம்மதித்தாய்;
வாழும் போது சேர மறுத்தாய்,
இறந்த பின்னோ,
என்னை தழுவி அணைத்தாய்!
இருந்துமே உன்னைக்
காதலிக்கிறேனடி என் கண்ணே!

Tuesday, May 26, 2009

மெழுகுவர்த்தி

உருகி உன் வாழ்வில் ஒளி தர துடிக்கிறேன்
நானும் மெழுகுவர்த்தியே!