Monday, August 17, 2009

அம்மா

அறியாத வயதில், அன்பினால் அரவணைத்தாய்
தவழ்ந்து வருகையிலே, பெருமிதப் புன்னகை புரிந்தாய் .
நடக்க முயற்சித்து தடுமாறிய பொழுது,
தவித்துக் கை கொடுத்தாய்!
எழுதற்குரிய புத்தகத்தை விடுத்து,
வீட்டுச் சுவரை புத்தகமாக்கிய பின்னும்
சிறு கண்டிப்புடன் கற்பித்தாய்.
உன் பயிற்சியினால் பள்ளியில் முதலிடம் பெற்றபொழுது,
பல்வேறு நபர்களிடம் பகிர்ந்து ஆனந்தமடைந்தாய்;
முடியாதென்று எதற்கும் சொல்லும் மடந்தை பருவத்தை
மனம் கவரும் சொல்லில் மாற்றினாய்!
உரிய வயதில் உரியவரிடம் கொடுத்து, உலகறியச் செய்தாய்;
அறிந்தேன் அம்மா !!
அம்மா என்பவள் தவம் புரிபவள் என்று,
அன்பே உருவான ஆருயிர் என்று,
அள்ளி அணைக்கும் த்யாகத்தின் கருவென்று !!