Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, April 30, 2009

அவல நிலை

அய்யா பசிக்குது என்றாள் சிறுமி
ஐயோ பாவம் என்று சில்லறை கொடுத்தார் பெரியவர்
அடியே வா என்று சைகை செய்தான் சாலையோர வாலிபன்
அண்ணா ரொம்ப பசிக்குது என்றாள் சிறுமி
பளீரென விழுந்தது கன்னத்தில் அறை
கலகலவென விழுந்தது சில்லறை, அவன் சட்டைப் பைக்குள்
அழுதுகொண்டே கை ஏந்தினாள் சிறுமி,
அடுத்த அய்யாவை நோக்கி